கட்சிக்காகவும், கர்நாடக வளர்ச்சிக்காகவும் எடியூரப்பா செய்த பங்களிப்பை அளவிட முடியாது – பிரதமர் மோடி
முன்னாள் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அவர்களை புகழ்ந்து ட்வீட் செய்த பிரதமர் மோடி.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகாவின் முதலமைச்சராக நான்காவது முறையாக பொறுப்பேற்றார் எடியூரப்பா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தார். பாஜகவை பொருத்தவரையில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் எடியூரப்பா அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்பதாகவே இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட பின் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதன்படி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை எடியூரப்பா அவர்கள் ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுள்ளார். இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பசவராஜ் பொம்மை அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, முன்னாள் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அவர்களை புகழ்ந்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘கட்சிக்காகவும் கர்நாடக வளர்ச்சிக்காகவும் எடியூரப்பா செய்த பங்களிப்பை அளவிட முடியாது. சமூக நலனுக்காக எடியூரப்பாவின் அர்ப்பணிப்பு பாராட்டப்படும்’ என தெரிவித்துள்ளார்.
No words will ever do justice to the monumental contribution of Shri @BSYBJP Ji towards our Party and for Karnataka’s growth. For decades, he toiled hard, travelled across all parts of Karnataka and struck a chord with people. He is admired for his commitment to social welfare.
— Narendra Modi (@narendramodi) July 28, 2021