பெங்களூரு கலவரம் குறித்து முதல்வர் எடியூரப்பா அவசர ஆலோசனை!
பெங்களூரு கலவரம் குறித்து முதல்வர் எடியூரப்பா அவசர ஆலோசனை.
கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில், இஸ்லாம் குறித்த அவதூறான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். இவரது செயலால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில், டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதிதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தான் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, முதல்வர் எடியூரப்பா இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.