பள்ளி, கல்லூரி திறப்பது குறித்து எடியூரப்பா ஆலோசனை..!

Default Image

சமீபத்தில், மத்திய அரசு வருகிற 15-ம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று கூறியது. இதனால், பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் எடியூரப்பா பள்ளி கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன்  இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனையில், பள்ளிகளை திறந்தால் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில்கொரோனா அதிகமாக பரவுவதால் பள்ளிகளை திறக்கக்கூடாது என பெற்றோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். கர்நாடகாவில் தினமும் 9,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்