கல்விக்கட்டண விவகாரம்-உச்சநீதிமன்றம் கைவிரிப்பா??

Default Image

கல்விக் கட்டணத்தை செலுத்தும் விவகாரத்தில் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

‘நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், யுஜிசி.யின் உத்தரவின் படி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடை விதிக்க முடியாது என்று கடந்த 28ந் தேதி உத்தரவிட்டது. அதே போல் பல்கலைக் கழங்கங்கள், கல்லூரிகள் விருப்பப்பட்டால் முதலாம், 2ம் ஆண்டுக்கான இறுதி தேர்வுகளையும் நடத்திக் கொள்ளலாம் என்ற ஒரு உத்தரவையும் கடந்த 3ந்தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதைத் தொடர்ந்து தேர்வுகளை நடத்த ஏற்பாடுகளை பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் செய்து வருகின்றன.

இவ்வாறு இருக்க சட்டக் கல்லூரி மாணவர் ராலே ராணா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2  தினங்களுக்கு முன்  வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் கொரோனா வைரஸ் பிரச்னையின் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள்,  கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற சூழலில் கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து  சற்று சலுகை அளிக்க வேண்டும் மற்றும் கட்டணத்தை செலுத்துவதற்கு கூடுதல் அவகாசமும் வழங்க வேண்டும் என்று தனது மனுவில் கூறிப்பிட்டுருந்தார். இவ்விவகாரம் குறித்து யுஜிசி, பார் கவுன்சில் ஆப் இந்தியா ஆகியவற்றிக்கு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியுள்ளார்

இம்மனு மீதான விசாரணை நீதிபதி அசோக் பூஷன் அமர்வு முன்  நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பல்கலைக் கழகங்களில் கல்விக் கட்டணம் செலுத்த வழங்கும் அவகாசம்  அல்லது அதனை தளர்த்தும் நடவடிக்கையானது மாணவர்களுக்கு மட்டுமின்றி,இது அவர்களின் பெற்றோர்களுக்கும் கொரோனோ காலத்தில் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.என்று வாதிட்டார்.   இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்கல்விக் கட்டணத்தை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது. வேண்டுமானால், மனுதாரர் அவரது மாநிலம் சார்ந்த உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கேட்கலாம்.என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்