புதுச்சேரியில் கல்வி கடன் ரத்து – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
சுகாதாரத்துறையில் 10 ஆண்டுக்கு மேல் உள்ள மருத்துவ பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மேம்பாட்டு கழகம் மூலம் பெற்ற கல்விக்கடன் அனைத்தும் ரத்து என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சென்டாக் மூலம் தீவு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.20,000 ஆக வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறையில் 10 ஆண்டுக்கு மேல் உள்ள மருத்துவ பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் எனவும் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசு துறையில் பணியாற்றுபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.10,000 வழங்கப்படும். மேலும், புதுச்சேரியில் வவுச்சர் ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.10,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.