கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லி இல்லத்தில் அமலாக்கத்துறை விசாரணையால் பரபரப்பு

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் அவர் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 8 சம்மனுக்கு ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்த டெல்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது.
Read More – தேர்தல் பத்திரங்கள் : உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி… சீரியல் நம்பர்களுடன் தாக்கல் செய்த SBI.!
டெல்லி அரசின் 2021 – 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத் துறை அனுப்பிய 8 சம்மன்களை அவர் நிராகரித்தார்.
Read More – 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவது எப்படி தெரியுமா? முழு விவரம்.!
இந்த நிலையில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது அவர் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நிராகரிக்கப்பட்டது, இப்படியான சூழலில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை 7 மணி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More – இந்தியாவில் ஜனநாயகம் இல்லை… ரயில் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை… ராகுல் காட்டம்.!
பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரது இல்லத்திற்கே சென்று அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். அவர் கைதாகலாம் என தகவல் பரவி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025