பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள் மசோதாவுக்கு வாக்கெடுப்பு…!!
இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்_ மக்களவையில் தாக்கல் செய்தார்.
இது வரை ஜாதிய ரீதியிலான இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட சூழலில் தற்போது பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் மசோதா அரசியலமைப்பு சட்டம் 124_இல் திருத்தம் கொண்டுவர மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நாளைய தினம் மாநிலங்களையில் தாக்கல் செய்ய இருக்கின்றது.இந்நிலையில் இந்த மசோதாவுக்கான வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இந்த வாக்கெடுப்பில் 3_இல் இரண்டு பங்கு அரசுக்கு ஆதரவு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..