பாலியல் வன்கொடுமை எதிரொலி..! அமேசானில் விற்று தீர்ந்த மிளகு ஸ்ப்ரே..!

Default Image
  • கடந்த வாரம் அமேசானில் அமெரிக்கா, கனடா மற்றும் சிங்கப்பூரில் ஆகிய நாடுகளை விட  மிளகு ஸ்ப்ரேக்கள் இந்தியாவில்  தான் அதிகம் விற்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பாலியல் பலாத்காரம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு பெண்ணைக் கொலை செய்தனர். அதன் 2012 முதல் 2017 வரை பாலியல் பலாத்காரம் குற்றங்கள் 31% உயர்ந்து உள்ளதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் கூட ஹைதராபாத் அருகே 27 வயது கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக  நான்கு பேரை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை என்கவுண்டர் செய்தனர்.இந்த என்கவுண்டருக்கு சில உரிமைக் குழுக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தக் கொலைகளை விமர்சித்தனர்.

ஆனால் இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரால் பாராட்டப்பட்டது. ஆனால் கொடூரமான தாக்குதல் இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு கோபத்தை அதிகரித்தது.  இதை தொடர்ந்து தற்காப்பு பயிற்சியை கற்று கொள்ள அனைத்து பெண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டு தனித்தனி தற்காப்பு பயிற்சி முகாம்களில் 100 க்கும் மேற்பட்டோர் பெண்கள் கலந்து கொண்டனர்.மேலும் தன்னார்வ குழுக்கள் நாட்டின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற முகாம்களை அமைத்து வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா முகாமில் கலந்து கொண்ட 32 வயதான அனிதா ராய்,  கூறுகையில் , ” கைப்பை அல்லது தாவணி போன்ற தினசரி பொருட்களைப் பயன்படுத்தி தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதையும் , நம் முழங்கால்களைப் பயன்படுத்திக் எப்படி தற்காத்துக் கொள்வதையும் நான் கற்றுக்கொண்டேன்” என கூறினார்.

இந்நிலையில் கடந்த வாரம் அமேசானில்  பாதுகாப்பு பொருளான மிளகு ஸ்ப்ரேக்கள் அமெரிக்கா, கனடா மற்றும் சிங்கப்பூரில் ஆகிய நாடுகளை விட  இந்தியாவில்  தான் 700 % விற்பனை அதிகரித்ததாக அமேசான் கூறியுள்ளது.

“கடந்த நான்கு முதல் ஐந்து நாட்களில் நாங்கள் சரக்குகளை முடித்துவிட்டோம்” என பெங்களூரை தளமாகக் கொண்ட ஆக்ஸ் குளோபல் நிறுவனத்தின் உரிமையாளர் ராணா சிங் கூறினார்.  இவர்கள் கோப்ரா பிராண்டட் மிளகு ஸ்ப்ரேக்களை தயாரிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்