இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பாட்டியாலாவில் இன்று இணைய சேவை முடக்கம்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள காளி மந்திர் அருகே இரு பிரிவினர் இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது. அதாவது, காலிஸ்தான் ஆதரவு அமைப்பான சீக்கியர்களின் குரு பத்வந்த் சிங் பண்ணு, நேற்று காலிஸ்தான் நிறுவன நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலிஸ்தானி கொடி ஏற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏராளமான காலிஸ்தானி ஆதரவு அமைப்பினர் திரண்டனர்.
மறுபுறம் அவர்களுக்கு எதிராக சிவசேனை கட்சியினர் உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள் சிலர் காவல்துறையின் அனுமதி பெறாமல் காலிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக முழக்கமிட்டு பேரணி நடத்தியாக தகவல் கூறப்படுகிறது. அப்போது, இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
அங்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த, பாட்டியாலாவில் ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்படும் மாநில உள்துறை மற்றும் நீதித்துறை முதன்மைச் செயலாளர் அனுராக் வர்மா அறிவித்துள்ளார்.
இரு தரப்பினருக்கு ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பிறகு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பாட்டியாலா துணை ஆணையர் மற்றும் எஸ்எஸ்பி கூறுகையில், சில நேர்மையற்ற கூறுகளால் மொபைல் இணைய சேவைகள் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படலாம். இதனால் தற்போது துணிடிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…