6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் முன் அமித்ஷா விவசாய சங்கங்களுடன் இன்று இரவு 7 மணிக்கு திடீர் பேச்சுவார்த்தை.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி-ஹரியானா எல்லையில் 13வது நாளாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக நடத்தியும், பலன் ஏதும் அளிக்கவில்லை. புதிய சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் ரத்து செய்யப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதையடுத்து, இன்று பாரத் பந்த் என்ற பெயரில் நாடு முழுவதும் விவசாய அமைப்பினர் முழு அடைப்பு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு பலரும் ஆதரவும் தெரிவித்தும் வருகின்றனர். சில இடங்களில் ரயில் மறியல், சாலை மறியல் என பல்வேறு விதமாக அவர்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று இரவு 7 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தைக்கு திடீர் அழைப்பு விடுத்துள்ளார். 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் முன் அமித்ஷா விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…