புரேவி புயல் எதிரொலி! திருவனந்தபுர விமான நிலையம் மூடல்! 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!
கேரளாவில், புரேவி புயல் எதிரொலியால், திருவனந்தபுர விமான நிலையம் மூடபட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. பாம்பன் பகுதியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் புயலை எதிர்கொள்ள கேரள அரசு முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 2000 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 217 தற்காலிக முகாகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசித்த 15 ஆயிரத்து 840 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புரேவி புயல், தமிழகத்தின் பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே இன்று பிற்பகலில் வலுவிழந்த நிலையில், இது இன்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் கேரள பகுதிக்குள் நுழைந்து, அரபிக் கடலுக்குள் செல்கிறது. இதனையடுத்து, பாதிப்புகளை எதிர்கொள்ள கடந்த 3 நாட்களாக கேரள அரசு தரப்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன/