தேர்தல் தேதி எதிரொலி.. மதுபான விற்பனை நேரம் 1 நேரம் குறைப்பு..!
புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைக்கப்பட்டுள்ளது.
புதுசேரியில் வரும் ஏப்ரல் 6 -ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைக்கப்பட்டுள்ளது. மதுபான குடோன்களில் மதுபான கடைகளுக்கு காலை 10 முதல் மாலை 5 மணி வரை மதுபானங்கள் கொண்டு செல்லலாம் என கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காலை 9 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை செயல்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.