டீசல் விலை உயர்வு எதிரொலி:அரசுப் பேருந்து கட்டணம் ரூ.10 வரை உயர்வு – அரசு அறிவிப்பு!

Default Image

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,டீசல் விலை உயர்வின் காரணமாக ஆர்டிசி பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக,ஆந்திர மாநில அரசு சாலை போக்குவரத்து கழக இயக்குநர் துவாரகா திருமலா ராவ்,ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது: “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆந்திரா மாநில அரசுப் பேருந்து கழகம் பல நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது.தினசரி 61 லட்சம் பேர் தங்கள் இடங்களை அடைய அரசுப் பேருந்து உதவுகிறது.ஆனால்,டீசல் விலை ஏறக்குறைய 60 சதவீதம் உயர்ந்து,இரண்டு ஆண்டுகளில் ரூ.5,680 கோடி வருவாய் குறைந்துள்ளது.

எனவே,நஷ்டத்தைத் தாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால்,மாநில பொதுப் போக்குவரத்துக் கழகம்,பல்லே வெளுகு(Palle Velugu) பேருந்துகளுக்கு டீசல் செஸ் 2 ரூபாயும்,எக்ஸ்பிரஸ் சேவை பேருந்துகளுக்கு 5 ரூபாயும்,உயர்நிலை (ஏசி) பேருந்துகளுக்கு 10 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளது.இது முழுக்க முழுக்க டீசல் மீது விதிக்கப்படும் செஸ் கட்டணம் மட்டுமே,மாறாக டிக்கெட்டுக்கானவை அல்ல”, என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்