கொரோனா பரவல் எதிரொலி..! இந்தியாவிலிருந்து தனி விமானம் மூலம் தப்பிச் செல்லும் பணக்காரர்கள்..!

Default Image

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு கிட்டத்தட்ட 3,50,000-த்தினை எட்டியுள்ளது.இதன்காரனமாக,இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் தனியார் ஜெட் விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.இந்த காரணத்தினால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பலர்,அதிக அளவில் பணம் செலவு செய்து ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு போன்ற சில நாடுகளுக்கு தனி விமானங்களை முன்பதிவு செய்து இந்தியாவில் இருந்து தப்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து,புதுடெல்லியைச் சேர்ந்த தனியார் ஜெட் நிறுவனமான கிளப் ஒன் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜன் மெஹ்ரா கூறுகையில்,”கொரோனா பரவல் காரணமாக கனடா, ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் யு.கே ஆகிய நாடுகள்,இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வர தடைகளை விதித்துள்ளன.மேலும்,மற்ற நாடுகள் நடவடிக்கைகளை அறிவிக்க தயாராக உள்ளன.

இந்நிலையில்,இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் அதிக அளவில் பணம் கொடுத்து,தனியார் ஜெட் விமானங்களை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.அதாவது,புது தில்லியில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் சென்றால்,தரை இறங்குதல் மற்றும் பிற கட்டணங்கள் உட்பட 1.5 மில்லியன் ரூபாய் ($ 20,000) செலவாகும்.

அதுமட்டுமல்லாமல்,நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு நெருக்கடியின் கீழ் உள்ளதால்,பாலிவுட் திரைப்பட சூப்பர்ஸ்டார்கள் போன்றோர் மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு தப்பிச் செல்கின்றனர்.மேலும்,மூன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து விலகி அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்”,என்று கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்