டெல்லியில் 2-வது நாளாக இன்றும் நில அதிர்வு .!
டெல்லியில் நேற்று மாலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. இந்த நடுக்கம் வடகிழக்கு டெல்லியை மையம் கொண்டிருந்தது.இதனால் மக்கள் பயந்து வெளியே ஓடி வந்தனர். டெல்லி அருகே நொய்டா, காசியாபாத், பரீதாபாத் ஆகிய நகரங்களிலும் நேற்று நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்நிலையில் இன்று மதியம் 2-வது நாளாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.