இன்று காலை அடுத்தடுத்து அசாம், ஒடிசாவில் நிலநடுக்கம்.!

Default Image

ஒடிசாவில் உள்ள பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

பெர்ஹாம்பூரிலிருந்து மேற்கு தென்மேற்கில் சுமார் 73 கிலோமீட்டர் தொலைவில் காலை 7:10 மணியளவில் லேசான நடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் நகரின் சில பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இப்பகுதியில் இருந்து இதுவரை எந்தவிதமான உயிரிழப்புகள்  மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதற்கு முன் அஸ்ஸாமில் சோனித்பூரில் அதிகாலை 5:26 மணியளவில்  ரிக்டர் அளவுகோலில் 3.5  ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்