திடீரென ஒடிசாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்.!
ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டத்தில் இன்று மாலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளுக்கு வந்தன. இந்த நிலநடுக்கத்தின் மையம் அம்மாவட்டத்தில் உள்ள காசிபூர் பகுதியில் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.