டெல்லியில் நிலநடுக்கம் : “மக்கள் பயப்படவேண்டாம்”..பிரதமர் மோடி வேண்டுகோள்!

டெல்லியில் அதிகாலை நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

pm modi earthquake in delhi

டெல்லி : நியூடெல்லியில் 4.0 ரிக்டர் அளவுகோலில் இன்று அதிகாலை 5:36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாலை நேரமாக இருந்ததால், பெரும்பாலான மக்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். பின் திடீரென நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

சில பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் , குறைந்த அளவில் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலநடுக்கம் டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, குர்கான் மற்றும் பல புறநகரப் பகுதிகளில் உணரப்பட்டது எனவும்  தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் (National Center for Seismology – NCS)  தகவலை தெரிவித்திருந்தது.

திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தற்போது பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். டெல்லி போலீசார் அவசர உதவிக்காக 112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, நிலநடுக்கம் வந்துவிட்டது என்றாலே மக்களை அதிர்ச்சியடை வைக்கும் வகையில் சில தகவல்கள் வெளியாவது என்பது வழக்கம் தான். எனவே, அப்படியான தகவல் வந்தாலும் மக்கள் பயப்படவேண்டாம் என பிரதமர் மோடி காலையிலேயே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தின் மூலம் வேண்டுகோளை வைத்திருக்கிறார்.

இது குறித்து மோடி அந்த பதிவில் கூறியதாவது ” இன்று டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மக்கள் அனைவரும் பயப்படாமல் கொஞ்சம் அமைதியாக இருக்கவும். பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்பதால் , எனவே எச்சரிக்கையாக இருக்கவும். அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்” எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்