டெல்லியில் அதிகாலை நிலநடுக்கம்! அதிர்ச்சியில் மக்கள்!
நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

டெல்லி : இன்று அதிகாலை 5:36 மணி அளவில் நியூடெல்லியில் 4.0 ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் (National Center for Seismology – NCS) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, குர்கான் மற்றும் பல புறநகரப் பகுதிகளில் உணரப்பட்டது.
அதிகாலை நேரமாக இருந்ததால், பெரும்பாலான மக்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். பின் திடீரென நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். சில பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் , குறைந்த அளவில் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேதம் ஏற்பட்டதா?
திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தற்போது பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல் இல்லை. இருப்பினும், நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். டெல்லி போலீசார் அவசர உதவிக்காக 112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டால், பாதுகாப்புக்காக கட்டிடங்களிலிருந்து வெளியேறி திறந்தவெளிகளில் நிலைத்திருக்கவும். அரசு அதிகாரிகள் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். டெல்லி போலீசார் அவசர உதவிக்காக 112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
EQ of M: 4.0, On: 17/02/2025 05:36:55 IST, Lat: 28.59 N, Long: 77.16 E, Depth: 5 Km, Location: New Delhi, Delhi.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/yG6inf3UnK— National Center for Seismology (@NCS_Earthquake) February 17, 2025