ஒடிசா அருகே வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்…! 5.1 ரிக்டர் அளவு பதிவு..!
வங்காள விரிகுடாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் திங்கள் கிழமை காலை 8.32 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. பூகம்பத்தின் ஆரம்பமானது கிழக்குப் பகுதியான புரி மற்றும் தென்கிழக்கு பகுதியான புவனேஸ்வர் ஆகியவற்றிலிருந்து 421 கிமீ மற்றும் 434 கிமீ தொலைவில் இருந்தது.
டாக்கா மற்றும் பங்களாதேஷின் பிற பகுதிகளில் காலை 9:05 மணியளவில் உணரப்பட்டதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கில், இந்தியாவுக்கு மிக அருகில் இருந்ததாக பங்களாதேஷ் வானிலை ஆய்வுத் துறை அதிகாரி ஒருவர் ட்ரிப்யூனிடம் தெரிவித்தார்.
மேலும் டாக்காவில் இருந்து தென்மேற்கே 529 கிமீ தொலைவிலும், காக்ஸ் பஜாரில் இருந்து தென்மேற்கே 340 கிமீ தொலைவிலும், சிட்டகாங்கில் இருந்து தென்மேற்கே 397 கிமீ தொலைவிலும் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டிருந்தது.