அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆகபதிவு.!
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ரிக்டரில் 4.0 அளவிலான லேசான நிலநடுக்கம், ஏற்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 4.0 ஆகபதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இரவு 11.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கமையம் தெரிவித்தது.
அந்தமான், நிகோபார் தீவுகளில், போர்ட்ப்ளெயிரில் 140 கிமீ தொலைவில், 28 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக மேலும் தெரிவித்தது. முன்னதாக கடந்த வாரம் (மார்ச் 24 அன்று), 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.