கடலுக்கு அடியில் 21 முறை நிலநடுக்கம்.. சுனாமி அச்சத்தில் கரையோர மக்கள்.!
அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று நேற்று முதல் நிலநடுக்கங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றனவாம். அதிலும் தற்போது வரை 21 முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் தலைநகரில் இருந்து தென் மேற்கு பக்கம் சுமார் 150 கிமீ தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வரை 4 நிலநடுக்க பதிவுகள் உருவான நிலையில், தற்போது வரையில் 4 முதல் 5 ரிக்டர் அளவுகளில் 21 நிலநடுக்க பதிவுகள் பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்தமான் நிகோபார் பகுதி கரையோர மக்கள் சுனாமி ஏதும் வந்துவிடுமோ என அச்சத்தில் இருக்கின்றனர். கடலுக்கு அடியில் தான் நிலநடுக்கம் என்பதால் நிலநடுக்கவியல் மக்களிடம் எந்தவித எச்சரிக்கை செய்தியையும் இதுவரை வெளியிடவில்லையாம். ஆதலால் சுனாமி வரும் வாய்ப்பு மிக குறைவு என்கிறார்கள் நிபுணர்கள்.