மிசோரத்தில் கடந்த 9 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம்.!

மிசோரத்தில் கடந்த 9 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 08:02 மணிக்கு மிசோரத்தின் சம்பாய் நகரின் 31 கிலோமீட்டர் தென்மேற்கு பகுதியில் ரிக்டர் அளவில் 4.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து நேற்று இரவு மற்றொரு நடுக்கம் இரவு 11:03 மணியளவில் மிசோரத்தின் சாம்பாய் நகரின் 70 கி.மீ தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மிசோரம் நிலநடுக்கத்தையும், நிலச்சரிவுகளையும் சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் 12 மணி நேரத்திற்குள் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தெரிவித்தார். அதில், மிசோரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 04.16 மணியளவில் ஐஸ்வாலின் கிழக்கு-வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது.
பின்னர், திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு தொடர்ந்து இரண்டாம் முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 எனப் பதிவாகியுள்ளது. கடந்த 9 மணி நேரத்தில் நடைபெற்ற 2 நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025