முதல்முறையாக பூமியை படம்பிடித்த சந்திராயன் 2
சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,சந்திரயான்-2 விண்கலம், வெற்றிகரமாக பூமியின் 4வது சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தபட்டது என்று தெரிவித்தது.இந்த நிலையில் சந்திரயான் 2 விண்கலம் முதல்முறையாக பூமியை படம்பிடித்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் இஸ்ரோ வெளியிட்டது. விண்கலத்தில் உள்ள LI4 கேமரா மூலம் நேற்று முன்தினம் மாலை பூமி படம் பிடிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
#ISRO
First set of beautiful images of the Earth captured by #Chandrayaan2 #VikramLander
Earth as viewed by #Chandrayaan2 LI4 Camera on August 3, 2019 17:28 UT pic.twitter.com/pLIgHHfg8I— ISRO (@isro) August 4, 2019
#ISRO
Earth as viewed by #Chandrayaan2 LI4 Camera on August 3, 2019 17:29 UT pic.twitter.com/IsdzQtfMRv— ISRO (@isro) August 4, 2019