யூடியூபில் சம்பாதித்த ரூ. 1.11 லட்சத்தை நிதியாக வழங்கிய 12 வயது சிறுமி..!
ஜம்மு காஷ்மீரை சார்ந்த குஹிகா என்ற 12 வயது சிறுமி யூடியூப்பில் வீடியோ பதிவிட்டதன் மூலம் தான் சம்பாதித்த ரூ .1.11 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.
குஹிகா கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுவதற்கும் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி முதன்மை மருத்துவர் டாக்டர் சஷி சுதன் சர்மாவுக்கு நன்கொடை அளித்தார்.
கடந்த நவம்பர் மாதம் தனது வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றியதன் மூலம் குஹிகா இந்த தொகை கிடைத்ததாக தெரிவித்தார். மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் தங்கள் சொந்த ஊருகளுக்கு நடந்தே செல்வதை அடைவதைக் கண்டேன்.
அவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பயணிப்பதைப் பார்த்து என் மனம் நொறுங்கியது. எனது நன்கொடை சில நோயாளிகளுக்கு உதவும் என்று நம்புக்கிறேன். கடவுள் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்திருந்தால், மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என குஹிகா கூறினார். குஹிகாவின் மனிதாபிமானத்தை முதன்மை ஜி.எம்.சி & ஏ.எச். டாக்டர் சுதான் பாராட்டினார்.