வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க தஜிகிஸ்தான் செல்கிறார்..!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க தஜிகிஸ்தான் செல்லவிருக்கிறார்.
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த வாரம் ஆப்கானிஸ்தான் தொடர்பான முக்கிய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஃப்கானிஸ்தான் தலைவர்கள் மற்றும் ரஷ்யா தலைமையிலான சிஎஸ்டிஓ பற்றிய கூட்டத்தில் பங்கேற்கிறார். செப்டம்பர் 16-17 இல் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தொடர்பான முக்கிய சந்திப்பில் பங்கேற்கிறார்.
நாட்டில் போரால் பாதிக்கப்பட்ட பின் அங்கு வேகமாக வளர்ந்து வரும் நிலைமை குறித்து ஈரான் உட்பட பல நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.