E-Way Bill நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது முறை…!
நள்ளிரவு முதல் மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு இ வே பில் முறை அமலுக்கு வந்தது.50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் செல்ல மின்னணு ரசீது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பதுக்கலை ஒழிக்கவும் வரி ஏய்ப்புகளைத் தடுக்கவும் சரக்குகளுக்கு இவே பில் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சரக்குகளுக்கான வரியை முன்கூட்டியே செலுத்தி ரசீது பெற்றால்தான் இனி பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
ஒரே மாநிலத்திற்குள் சரக்குகளைக் கொண்டு செல்லும் இ வே பில் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவே பில் பெறுவதற்காக இணையதளத்தில் தங்கள் பெயர்களை அனைத்து வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்களும் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இந்த வாரத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் நிறுவனங்கள் இ வே பில்லுக்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.