‘e-RUPI’ – புதிய திட்டத்தை இன்று அறிமுகம் செய்கிறார் பிரதமர் மோடி!
e-RUPI எனப்படும் மின்னணு பரிவர்த்தனை திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிமுகபடுத்துகிறார்.
QR CODE அல்லது SMS மூலம் பயனாளிகளின் செல்போன்களுக்கே அனுப்பப்படும் e-RUPI எனப்படும் மின்னணு பரிவர்த்தனை திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிமுகம் செய்யவுள்ளார். இந்த திட்டம் மின்னணு முறை மூலமாக மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் எந்த இடையூறும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு சென்று சேர உதவும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
e-RUPI மின்னணு பரிவர்த்தனை திட்டத்தை (National Payments Corporation) நிறுவனம், அதன் யுபிஐ தளத்தில் நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
தாய் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்கள், காசநோய் ஒழிப்பு திட்டங்கள், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, உர மானியங்கள் போன்ற திட்டங்களின் கீழ் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து ஆதரவை வழங்கும் திட்டங்களின் கீழ் இந்த சேவைகளை வழங்கவும் இது பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், தனியார் துறைகளும் தங்கள் ஊழியர் நலன் மற்றும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த டிஜிட்டல் வவுச்சர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நிலையில் e-RUPI எனப்படும் மின்னணு பரிவர்த்தனை திட்டத்தை பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிமுகப்படுத்துவார் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
Prime Minister Shri @narendramodi will launch a new digital payment solution e-RUPI at 4.30 pm, today.
Watch Live:
????https://t.co/TiU6dFudVu
????https://t.co/B6xwqCvduP
????https://t.co/Rce2YJ6jhU pic.twitter.com/A2mCdhtPJi— Office of Mr. Anurag Thakur (@Anurag_Office) August 2, 2021