கொரோனா பரவலை தடுக்க டெல்லியிலும் இ- பாஸ் முறை தொடக்கம்!
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க டெல்லியிலும் இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களுக்காக தற்பொழுது அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், பேருந்திலோ அல்லது மகிழுந்திலோ ஒரு மாவட்டம் விட்டு மறு மாவட்டம் செல்ல இ பாஸ் பெற்றே செல்ல வேண்டும் என தமிழகத்தில் கடந்த மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அது போல டெல்லியிலும் தற்பொழுது இந்த இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடிதம் மூலமாகவோ விண்ணப்பம் மூலமாகவோ சிரமப்படாமல், 9910096264 இந்த எண் மூலம் இ பாஸ் அனுமதி பெறலாம் கூறப்பட்டுள்ளது.