இந்த சிகரெட்டை முதல் தடவை பிடித்தால் 1 லட்சம் அபராதம்! மீண்டும் பிடித்தால் 3 லட்சம் அபராதம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
புகை [பிடிப்பவர்கள் சிலர் புகையிலை இருக்கும் சிகெரெட்டை விடுத்து, பேட்டரி மூலம், சார்ஜ் செய்து உபயோகப்படுத்தும் இ-சிகெரெட்டை பயன்படுத்துகின்றனர். இந்த சிகெரெட்டில், நிகோடின் மற்றும், ஒருவித ரசாயன திரவம் நிரப்பப்பட்டிருக்கும். சிகரெட்டை ஆன் செய்தவுடன், சிகெரெட்டினுள் உள்ள திரவம் சூடாகி புகை வெளியே வரும் அதனை சிகெரெட் பிடிப்பவர்கள் உபயோகப்படுத்தும் போது புகை பிடிப்பதுபோல உணர்வை உண்டாக்குகிறது. இதன் மூலம், புற்றுநோய், நாக்கு கறுப்பாக்குதல், ஒவ்வாமை, சுற்றி இருப்பவர்களுக்கும் இதே பாதிப்புகள் வரக்கூடும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இதன் காரணமாக நேற்று இந்த இ-சிகெரெட்டை பயன்படுத்துவதை தடை விதித்து மத்திய அரசானது அவசர அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணையை அடுத்த வரவுள்ள கூட்டத்தொடரில், பாராளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ளனர்.
மேலும், இந்த இ-சிகெரெட்டை உபயோகப்படுத்தினால், முதலில் 1 லட்சம் ருபாய் அபராதமும், ஓராண்டு சிறையையும் விதிக்கப்படும் எனவும், அதனை இரண்டாம் முறையும் மீறுபவர்களுக்கு 3 லட்சம் அபராதமும், 3 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விற்ப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது