போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் நேற்று தொடங்கப்பட்டது.
போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கி, கேரள அரசு நேற்று இ-செல்லான் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி உடனடியாக அபராதம் செலுத்த முடியும். இந்த புதிய முறையை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
இதனையடுத்து அவர் பேசுகையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டபோது முன்னதாக புகார்கள் வந்தது என கூறினார். ஆனால், இப்போது போக்குவரத்து கேமராக்கள் குற்றங்களை துல்லியமாக பதிவுசெய்கின்றன மற்றும் நேரடி தொடர்பு இல்லாமல் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், புகார்களைத் தவிர்க்க முடியும் என்று தெரிவித்தார். தற்போது, சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து விதிகள் திறம்பட செயல்படுத்தப்படுவது இன்னும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…