வட மாநில தசரா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி!
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் துர்கா நவமி அன்று பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக நடைப்பெற்றது. நேற்று மாலை நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததுள்ளனர் என்றும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் தற்போது சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜா தள துர்கா பூஜை ‘மகா நவமி’ கொண்டாட்டங்கள் மற்றும் களியாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோபால்கஞ்ச் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வர்ண பிரபாத் கூறுகையில், கூட்ட நெரிசலுக்கு மத்தியில் குழந்தை விழுந்ததுள்ளது, அந்த குழந்தையை காப்பாற்றும் முயற்சியில், இரண்டு பெண்களும் கீழே விழுந்து, எழுந்திருக்க முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறினார்.
இந்நிலையில், துர்கா பூஜையின் போது, இந்த சோகமான சம்பவம் அப்பகுதியை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.