பிரதமரின் பேரணியின் போது, அத்துமீறி உள்நுழைந்தவர் கைது.!
மும்பையில் பிரதமரின் பேரணியின், விவிஐபி(VVIP) பகுதிக்குள் நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியின், பொதுப்பேரணியின் போது மிகமிக முக்கிய நபர்களை மட்டும் அனுமத்திக்கும் விவிஐபி(VVIP) பகுதிக்குள் அத்துமீறி ஒருநபர் நுழைய முயன்றுள்ளார். அவரை போலீசார் விசாரித்த போது, தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி), என்ற பெயரில் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அடையாள அட்டையில் சந்தேகம் இருப்பதாக போலீசார் உணர்ந்தனர்.
இதனையடுத்து தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) என்ற பெயரில் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி நுழைய முயன்றதாகக் கூறப்படும், 35 வயது நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ராமேஷ்வர் மிஸ்ரா, நவி மும்பையில் வசித்து வருகிறார், தான் இந்திய ராணுவத்தின் காவலர் படைப்பிரிவின் சிப்பாய் என்று கூறி வருகிறார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.