பீகார் முதல்வர் நடைப்பயிற்சியின் போது, பாதுகாப்பை உடைத்து சென்ற பைக்… இருவர் கைது.!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இன்று நடைப்பயிற்சியின் போது பைக்கில் வந்த நபர்கள் பாதுகாப்பை தாண்டி சென்றதால் பரபரப்பு.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இன்று காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று பைக்கில் வந்த நபர்கள், முதல்வரின் பாதுகாப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்காக இருவரும் பாட்னா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக்கில் வந்த நபர்கள் கிட்டத்தட்ட பீகார் முதல்வரை மோதியிருக்கக்கூடும்.
அதே நேரம் நிதிஷ் குமார் தன்னைக் காப்பற்றிக்கொள்ள சட்டென நடைபாதையில் குதித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் சர்குலர் சாலைக்கு அருகில் அரசியல் தலைவர்கள் வசிக்கும் பகுதியில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் பைக்கில் வந்த இருவரையும் உடனடியாக கைது செய்தனர், இந்த சம்பவம் குறித்து இருவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.