டூப்ளிகேட் சிம்கார்டு பெற்ற நபர் 68 லட்சம் மோசடி செய்த நிலையில், சம்மந்தப்பட்ட சிம் கார்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு 28 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் தற்பொழுது செல்போன் சிம்கார்டு நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்கார்டை உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் பொழுது, அந்த சிம் கார்டை போலியாக தயாரித்து அந்த எண்ணை வேறொருவருக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் பல சமயங்களில் பிரச்சனை ஏற்படவும் செய்கிறது. தற்பொழுதும், ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் நகரை சேர்ந்த கிருஷ்ண லால் என்பவருடைய செல்போன் சிம்கார்டு 2017 ஆம் ஆண்டு மே 25-ம் தேதியுடன் செயல்படாமல் இருந்துள்ளது.
இதனை அடுத்து அண்மையில், அந்த செல்போன் நிறுவனத்தை தொடர்பு கொண்ட கிருஷ்ணலால் தனக்கு அதே எண்ணில் புதிய சிம்கார்டை வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். அவருக்கும் அதே எண்ணில் புதியதாக சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பின்பு ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே ஆல்வார் நகரை சேர்ந்த பிரதாப் என்பவருக்கு கிருஷ்ண லாலின் செல்போனில் ஒரு டுப்ளிகேட் சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிம் கார்டு வைத்திருந்த பிரதாப், கிருஷ்ணரின் புதிய சிம் கார்டு ஆக்டிவேட் ஆனதும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 68.5 லட்சத்தை எடுத்துள்ளார். இதற்காக கிருஷ்ணனின் சிம்கார்டுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கிருஷ்ணலால் போலீசில் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் அந்த செல்போன் நிறுவனம் கிருஷ்ண லாலின் எண்ணில் டுப்ளிகேட் சிம் கார்டு வழங்கி இருப்பதும், அதை பயன்படுத்தி தான் அவர் பணம் எடுத்துள்ளார் என்பதையும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து பிரதாப் கிருஷ்ணனுக்கு 44 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள 28.5 லட்சத்தை அவர் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனை அடுத்து ராஜஸ்தான் அரசு தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளரும் தீர்ப்பு அதிகாரியுமாகிய அலோக் குப்தாவிடம் கிருஷ்ண லால் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு வரவேண்டிய மீதி தொகையை அதற்கான வட்டியுடன் சேர்த்து செல்போன் நிறுவனம் தருமாறு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தீர்ப்பளித்துள்ள தீர்ப்பு அதிகாரி அலோக் குப்தா கிருஷ்ண லாலின் வங்கி கணக்கில் ஒரு மாதத்திற்குள் 27.5 லட்சம் பணத்தை சம்மந்தப்பட்ட செல்போன் நிறுவனம் செலுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் 10 சதவீத வட்டியுடன் அந்த தொகையை செலுத்த நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…