வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி.! பள்ளிகளுக்கு விடுமுறை.! புதுச்சேரி அரசு உத்தரவு.!
பரவும் வைரஸ் காய்ச்சல் முன்னெச்செரிக்கை காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்புளூவன்சா வைரஸ் காய்ச்சல் அதிகமாகி கொண்டு வருகிறது. இது சாதாரண பருவ காய்ச்சல் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பரவும் காய்ச்சல் :
இருந்தாலும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குஇருமல் தும்மல் வழியாக பரவும் என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தனிமைப்படுத்தி இருக்கவும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் அரசு வலியுறுத்தி வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை :
இந்நிலையில், இந்த பரவும் வைரஸ் காய்ச்சலால் மாணவர்களுக்கு எதுவும் பாதிப்பு நிகழ்ந்து விட கூடாது என புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு :
புதுச்சேரி சட்ட பேரவையில், கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், வைரஸ் காய்ச்சலால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, 1 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 16 முதல் மார்ச் 26ஆம் தேதி வரையில் விடுமுறை என அறிவித்துள்ளார்.