கொரோனா தொற்று அதிகரிப்பு.! வழக்கறிஞர்களுக்கு புதிய சலுகையை அளித்த உச்சநீதிமன்ற நீதிபதி.!
கொரோனா பரவல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் காணொளி வாயிலாக வழக்கறிஞர்கள் ஆஜராக தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக நாடுமுழுவதும் அரசு அறிவுறுத்தலின் பெயரில் பல்வேறு இடங்களில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காணொளி வாயிலாக ஆஜர் :
தற்போது, கொரோனா பரவல் காரணமாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு ஓர் சலுகையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். அதன் படி, கொரோனா பரவல் காரணமாக, காணொளி வாயிலாக ஆஜராக விரும்பும் வழக்கறிஞர்கள் அனுமதி பெற்று காணொளியில் ஆஜராகலாம் என கூறினார்.
கொரோனா பரவல் :
கொரோனா பரவல் ஓய்ந்த பிறகு அனைத்து பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பிய நிலையிலும், இறுதியாக இயல்பு நிலைக்கு திரும்பியது உச்சநீதிமன்றம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் வயதான வழக்கறிஞர்கள் அதிகம் இருந்த காரணத்தால் இயல்பு நிலைக்கு திரும்ப தாமதமானது குறிப்பிடத்தக்கது.