கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்.! 8000 வாத்துகளை அழிக்க நடவடிக்கை.!
கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் அதிகரித்து வருவதால் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
தற்போது கேரள மாநிலம் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கோட்டயம் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு 1கிமீ சுற்றளவில் உள்ள பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 8000 வாத்துகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீஉத்தரவின் பேரில், கிராமப்புறங்களில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊர்களில் 1 கிமீ சுற்றளவுக்கு உள்ள பாதிக்கப்பட்ட பறவைகளை அழிக்கவும், அதனை பத்திரமாக வெளியேற்றவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
டிசம்பர் 13 முதல் மூன்று நாட்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கோழி, வாத்து, பிற நாட்டுப் பறவைகள், முட்டை, இறைச்சி மற்றும் உரம் விற்பனை மற்றும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கதிற்கு மாறாக ஏதேனும் பறவைகள் இறந்தால் உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.