சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தகவல் வெளியாகியுள்ளது
கேரளாவில் அமைந்துள்ள பிரதிசித்திபெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் வரும் ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்படும் இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அம்மாநில சுகாதாரத் துறை எதிர்ப்பால், சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்கள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளிவருகிறது.
மேலும் கொரோனாத்தொற்றால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. என்றபோதிலும் கார்த்திகை 1ந்தேதி முதல் நவ., 16 வரை பக்தர்கள், ஆன்லைன் முலமாக முன்பதிவின் வழி அனுமதிக்கப்படுவர் என்றும் அதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த தகவலுக்கு முன் ஐப்பசி மாத பூஜையிக்கு குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. ஐப்பசி மாத பூஜைஅக்., 16ந்தேதி தொடங்க உள்ளது.ஆனால் சபரிமலைக்கு பக்தர்களை அனுமதிக்க, சுகாதாரத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் தற்போது கொரோனாத்தொற்று வேகமாக பரவியும் வருவதால், பக்தர்களை அனுமதித்தால் மேலும் பரவல் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே ஐப்பசி மாதத்திலும் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாத சூழலல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியதாவது:ஐப்பசி மாத பூஜையில், பக்தர்களை அனுமதிப்பதன் மூலம் மண்டல, மகரவிளக்கு காலத்தில், பக்தர்களை அனுமதிக்க உதவியாக இருக்கும் என்று முடிவு எடுத்தோம் ஆனால். சுகாதாரத் துறை எதிர்ப்பால், எங்கள் முடிவை திரும்பப் பெற்றுள்ளோம் என்று கூறினார்.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…