கனமழையால் தத்தளிக்கும் தலைநகர்.. யமுனை நதியில் வரலாறு காணாத வெள்ளம்.!
கனமழையால் டெல்லியில் யமுனை நதியில் இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீரின் அளவு உச்சவரம்பை எட்டியுள்ளது .
கடந்த சில நாட்களாக வடஇந்தியாவில் கனமழை கொட்டி தீர்த்து பல்வேறு மாநிலப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் மழைநீர் புகுந்த இடங்களில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வரும் அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது.
டெல்லியில் கனமழை காரணமாகவும், ஹரியானா மாநிலத்தில் உள்ள அணையில் இருந்து நீர் அதிகளவில் வெயியேற்றப்படுவதாலும் யமுனை நதிக்கரையில் இரு பகுதிகளிலும் உச்சவரம்பு நிரம்பி வருகிறது.
நேற்று (புதன்கிழமை) இரவு 10 மணியளவில் யமுனை நதிக்கரையின் உச்சவரம்பு 208.05 மீட்டராக உயர்ந்தது, இது 1978க்கு பிறகு அதிகபட்ச அளவாகும். அந்த சமயம் 207.49 மீட்டர் வரை நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. கனமழை, யமுனை ஆற்றின் நீர் நிரப்புவது தொடர்பாக, மாநில துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.