தேர்தல் வன்முறை : மே. வங்கத்தில் இன்று 4 மாவட்டங்களில் மறுவாக்குபதிவு.!

தேர்தல் வன்முறை காரணமாக மேற்கு வங்கத்தில் இன்று 4 மாவட்டங்களில் மறுவாக்குபதிவு நடைபெறுகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து வன்முறைகள் அதிகமாகின. இந்த வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த 8 தேதி பலத்த பாதுகாப்பு மடியில் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே பல்வேறு இடங்களில் வன்முறைகள் அதிகமாகின. வாக்கு பெட்டிகள் தூக்கிச் சென்று உடைக்கப்பட்டன. வாக்குச்சாவடிற்கு தீ வைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றன. மக்கள் வாக்களிக்கவே சில இடங்களில் செல்ல மறுத்தனர்.
இதனால் இந்த மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 37 ஆக உயர்ந்தது. இதில் 20 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
வன்முறை சம்பவங்கள் காரணமாக கடந்த 8ஆம் தேதி நடைபெறாமல் இருந்த வாக்கு பதிவு இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.