அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் துபாய்க்கு ஜூலை 26 வரையில் இயக்கப்படுகின்றன.
துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனமானது தற்போது கூடுதலாக இந்தியாவில் நான்கு நகரங்களில் இருந்து விமானங்களை துபாய்க்கு இயக்க திட்டமிட்டுள்ளது.
ஜூலை 12 முதல் ஜூலை 26 வரையில் இந்த சிறப்பு விமான சேவை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் நகரங்களை தவிர, மேலும், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் மட்டும் அனுமதிக்க விடுவதாக விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தி குறிப்பில் கொச்சி, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து இரு திசைகளிலும் அதாவது, துபாயிலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து துபாய்க்கும் தகுந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆனால், பெங்களூர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் கொல்கத்தா ஆகிய நகரங்களிலிருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானங்களானது, இந்தியாவிலுள்ள பயணிகளை மட்டுமே ஏற்றி செல்லும் எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…