கொரோனா வைரஸின் 2-வது அலையில் இருந்து பாதுகாக்கும் இரட்டை முகக்கவசம்…!
இரட்டை முகக்கவசம் அணிதல் கொரோனா வைரஸின் 2-வது அலையில் இருந்து பாதுகாக்கும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாநில அரசுகளும், பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பொதுவாக மக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், சானிடைசரை பயன்படுத்தி கைகளை கழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால், இரட்டை முகக்கவசம் அணிதல், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாப்பதாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் இது தொடர்பாக அரசு சில அறிவுரைகள் வழங்கியுள்ளது.
செய்ய வேண்டியவை
- இரட்டை முகக்கவசம் என்பது ஒரு அறுவைசிகிச்சை முகக்கவசம் ஆகும். இது இரண்டு அல்லது மூன்று அடுக்கு துணிகள் கொண்டிருக்க வேண்டும்.
- முகமூடியை மூக்குப்பாலத்தில் இறுக்கமாக அழுத்த வேண்டும்.
- சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- துணி முகமூடியை தவறாமல் தினந்தோறும் கழுவ வேண்டும்.
செய்ய கூடாதவை
- ஒரே மாதிரியான இரண்டு முககவசத்தை இணைந்து அணிய கூடாது.
- தொடர்ந்து இரண்டு நாட்கள் ஒரே முகமூடியை அணிய கூடாது.
ஒரு ஆய்வின்படி, இரட்டை முகக்கவசத்தை அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கப்படுவதோடு, வாய் மற்றும் மூக்கு வழியாக கொரோனா வைரஸ் செல்வதை தடுக்கலாம்.