டெல்லியில் டி.எஸ் வசீர் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு..!
தேசிய மாநாட்டின் (NC) தலைவர் திரிலோச்சன் சிங் வஜீரின் உடல் இன்று டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மற்றும் தேசிய மாநாட்டின் (NC) தலைவர் திரிலோச்சன் சிங் வஜீரின் உடல் இன்று டெல்லியில் கே.மோதி நகரில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோருக்கு மிக நெருக்கமானவராக கருதப்பட்டார்.
இவர் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. டெல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததால் குடும்பத்தினர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய விசாரணையை தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
டிஎஸ் வஜீரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தேசிய மாநாட்டின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சர்தார் டிஎஸ் வசீர் திடீர் மறைவு செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தேன். சில நாட்களுக்கு முன்பு தான் நாங்கள் ஜம்முவில் ஒன்றாக அமர்ந்திருந்தோம். நான் அவரை கடைசியாக சந்திப்பேன் என்று புரியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
Shocked by the terrible news of the sudden death of my colleague Sardar T. S. Wazir, ex member of the Legislative Council. It was only a few days ago that we sat together in Jammu not realising it was the last time I would be meeting him. May his soul rest in peace. pic.twitter.com/n78Q0tIPYr
— Omar Abdullah (@OmarAbdullah) September 9, 2021