கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 பகுதிகளாக நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்து செல்லப்படும்..? எப்படி பதப்படுத்தி வைக்கப்படும் அதன் பிறகு எந்த தேதியில், எந்த நேரத்தில் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி சரியான முறையில் நடக்க வேண்டும்.இதில் எந்தவித குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆந்திரா, அசாம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான முன்னோட்ட நடவடிக்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்றும் மாநிலங்கள் தடுப்பூசி போட தயாராகுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…