குடிபோதையில் பாம்பை பிடித்து தொந்தரவு செய்த ஆசாமி .!கடைசியில் சுருண்டு விழுந்த பாம்பு.!
- ராஜஸ்தான் சேர்ந்த பிரகாஷ் மகாவர் என்பவர் குடித்துவிட்டு குடிபோதையில் பாம்பை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டு தொந்தரவு செய்து உள்ளார்.
- பின்னர் அப்பகுதி மக்கள் பிரகாஸை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் தவ்சா என்ற கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மகாவர் என்பவர் குடித்துவிட்டு குடிபோதையில் சாலையில் நடந்து வந்து உள்ளார்.அப்போது அவர் வந்த சாலையில் குறுக்கே ஒரு பாம்பு சென்று உள்ளது.
பாம்பை பார்த்த பிரகாஷ் அந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பை பிரகாஷ் பிடித்து உள்ளார். அப்போது பாம்பு பாம்பு பலமுறை பிரகாஷ் கடித்து உள்ளது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பிரகாஷ் பாம்பை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டும் , வாலை பிடித்துக்கொண்டும் அந்த பாம்பை தொந்தரவு செய்து உள்ளார்.
மீண்டும் பாம்பு பிரகாஸை கடித்தும் அவர் பாம்பை விடுவதாக இல்லை ஒரு கட்டத்தில் அந்த பாம்பு சுருண்டு விழுந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பிரகாஸை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.