ஹைதராபாத் : மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் குடிபோதையில் மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி 50 வயது நபரை அவருடைய மனைவி கோடரியால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுல்தான்பூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு வீட்டிற்குச் சென்ற நபர் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து, அதனை எதிர்த்து மகள் கேட்ட நிலையில், அவரிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி அந்த நபரை கோடரியால் தாக்கி கொலை செய்தார். விசாரணையில், உயிரிழந்த அந்த நபர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மகளை கொடுமைப்படுத்துவார்.
புதன்கிழமையும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மகளிடம் தகராறு செய்துள்ளார். இருவரும் அந்த நபரின் கொடுமையை கொஞ்ச நேரம் பொறுத்துக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் மகளிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தால் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதையால் சோர்வடைந்த அவரது மனைவி, கோடாரியை எடுத்து அவரை பலமுறை தாக்கிய நிலையில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவலை தெரிவித்தனர்.
மேலும் , இந்த சம்பவத்தை தொடர்ந்து மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த பெண் மீது புல்கல் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…