குழந்தை அழுததால், போதையில் இருந்த தந்தை குழந்தையை தரையில் அடித்து கொன்ற சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபால்புரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளது. தற்பொழுது நான்காம் குழந்தை பிறந்ததால், அந்த குழந்தைகளின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தந்தையுடன் அந்த மூன்று குழந்தைகள் வீட்டில் இருந்தனர். தந்தை மது போதையில் இருந்தார். அப்பொழுது ஒன்றரை வயதான மூன்றாம் குழந்தை சத்தமிட்டு அழுதுள்ளாள். இதனால் கோபமடைந்த தந்தை, குழந்தையை தரையில் தூக்கி அடித்துள்ளார். இதனால் அந்த குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.
உடனடியாக அந்த குழந்தையை அருகில் உள்ள சாக்கடையில் அக்குழந்தையின் உடலை தூக்கி எறிந்தார். மறுநாள் உடலை காண்ட துப்புரவு தொழிலார்கள், காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரித்தபொது, அந்த குழந்தையின் தந்தையே அடித்து கொன்றது தெரிய வந்தது.
இந்நிலையில் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனை நீரில் பார்த்த மற்ற இரண்டு குழந்தைகள், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. தந்தையே குழந்தையை கொன்ற சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…