ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்.! டெல்லியில் கைதான இருவர்.!

Default Image

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதாகக் கூறி போதைப்பொருட்கள் கடத்தல்.!

பொதுமுடக்கத்தை பயன்படுத்தி ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்திய 2 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களை கடத்தியாக ஷான்மைஷீ, சேத்தன் பத்தியால் ஆகிய இருவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதாகக் கூறி போதைப்பொருட்களை கடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லைகளைக் கடக்க இ-பாஸைப் பயன்படுத்தி வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸின் பரவலைச் சமாளிக்க மார்ச் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் பயணிகள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை கடக்க சரியான காரணத்துடன் இ-பாஸ் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லிக்கு போதைப்பொருட்களை காரில் கடத்த முன்றபோது காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக போலீஸ் கமிஷனர் பிரமோத் குஷ்வா தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, காவல்துறை அவர்கள் வாகனத்தை தடுத்து, காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள சுமார் 12 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்தனர். இருவரும் பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூரில் வசித்து வருகிறார்கள் என்றும் ஜார்கண்டில் உள்ள ஹசாரிபாகில் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள சுமார் 50 கிலோ அளவு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக இருவரும் விசாரணையில் ஒப்புக்கொண்டனர். இதனை காவல்துறை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்