பள்ளி மாணவர்களுக்கு கர்நாடகாவில் போதை பொருள் தடவிய ஐஸ் க்ரீம் விற்பனை – கல்வி மந்திரி!
கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடவிய ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாக கல்வி மந்திரி குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
கன்னட திரை உலகில் மற்றும் பெங்களூருவில் சில முக்கியமான நிகழ்ச்சிகளில் போதைப்பொருள் விவாகாரம் தற்பொழுது நடந்து வருவதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல இடங்களில் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதன்மை மற்றும் மேல்நிலை கல்வி மந்திரி சுரேஷ் குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, வசதி படைத்த மாணவர்கள் படிக்க கூடிய பள்ளிக்கூடங்களுக்கு வெளியே போதைப்பொருள் கும்பலின் நெட்வொர்க் செயல்படுகிறது என்ற சந்தேகம் அரசுக்கு எழுந்துள்ளது.
அதுபோல பள்ளிகளுக்கு வெளியே போதை பொருட்கள் தடவபட்ட ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து மாணவர்களை தங்களது வசம் இழுக்கின்றனர் எனவும் சந்தேகம் எழுப்பியுள்ளது. இந்த செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து விரைவில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என கூறியுள்ளார்.